திருப்பதி கோயிலுக்கு விரைவில் மூன்றாவது பாதை அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஏற்கனவே இரண்டு உள்ள மலைப்பாதைகள் உள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது மலை பாதை அமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு உள்ளது
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டு வழிகளிலும் பழுது ஏற்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல மூன்றாவது மலைப்பாதை அமைக்க விரைவில் வனத்துறை அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என சற்று முன்னர் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.