திருச்செந்தூர் முருகன் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

hqdefault

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழாவில்,தேரோட்டம் காலை கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.  முருகனின் ஆறு படை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்திருவிழா 12 நாட்கள் நடக்கும். செப்., 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும், காலை,மாலை பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சண்முகர் சிவப்பு, பச்சை சார்த்தி கோலத்தில், தங்க சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் பத்தாம் நாளான இன்று(செப்.11) அதிகாலை 5.30 மணிக்கு குமரவிடங்கப் பெருமான், வள்ளி , தெய்வானயுடன் எழுந்தருளினார்.விநாயகர், வள்ளியம்மன், தனித்தேரில் எழுந்தருளினார். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது. காலை 6 மணிக்கு விநாயர் தேர் வடம் பிடித்தனர். 6.30 க்கு நிலையை அடைந்தது. குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் 6.40 மணிக்கு தேர் வடம் பிடித்தனர். ரத வீதிகள் வழியாக உலா வந்தது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர், 7.40 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. மூன்றாவதாக வள்ளியம்மன் தேர் 7.45 வடம் பிடிக்கப்பட்டது. 8.20 மணிக்கு நிலையை அடைந்தது.

Leave a Reply