திருமலை கோவிலில் 45 நிமிடத்தில் தரிசனம்!

lord-balaji2

திருமலையில், கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள், 45 நிமிடத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருமலையில் நேற்று, நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கியது. இதை முன்னிட்டு 14.10.15-ம் தேதி  காலை, மலையப்ப சுவாமி தங்கப் பல்லக்கில் மாட வீதியில் வலம் வந்தார். இரவு, பெரிய சேஷ வாகனத்தில், உபய நாச்சியார்களுடன் வலம் வந்தார்.

திருமலையில், இரண்டு நாட்களாக, பக்தர் கூட்டம் குறைவாக உள்ளது. நேற்று, தர்ம தரிசன பக்தர்கள், 45 நிமிடத்தில் ஏழுமலை யானை தரிசித்தனர். உண்டியல் மூலம், 1.50 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் உண்டியல் வருமானம், வழக்கம் போல் வசூலானது.

திருமலையில் 14.10.15-ம் தேதி காலை, தங்கப் பல்லக்கில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்ததை காண, பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கலைந்து செல்லும் போது, நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; இதை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களை, போலீசார் மிரட்டினர்.

Leave a Reply