திருமலை கோவில் நிர்வாகத்திற்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் மூன்று நாள் பவித்ரா உற்சவம் திங்கள் கிழமை (ஆக.10ல்) துவங்கியது.
வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழானை முன்னிட்டு சுவாமிக்கு நீராட்டு உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இன்று முதல் மூன்று நாட்கள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.