திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குட்பட்ட அப்பலக்குண்டா பிரசன்னா வெங்கடாசலபதி கோயில் திருப்பதியில் இருந்து இருபது கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது.
இங்கு நடைபெற்ற சக்ர ஸ்நான விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரையும் கரையில் தேவியருடன் வீற்றிருந்த பெருமாளையும் தரிசித்தனர்.