திருமலையில் விமரிசையாக நடந்த பார்வேட்டை உற்சவம்!

திருப்பதி: திருமலையில், நேற்று மதியம், பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், பார்வேட்டை உற்சவம் நேற்று நடைபெற்றது.

om namo naraya (19)

திருமலையில், மாட்டுப் பொங்கல் தினத்தன்று, ஏழுமலையான் வேட்டைக்கு செல்வதாக, புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, தேவஸ்தானம், இந்த உற்சவத்தை நடத்தி வருகிறது.

om namo naraya (30)

 

அதற்காக, ஏழுமலை யானின் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி, பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள பார்வேட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் மான் ஒன்றை வேட்டையாடுவது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின், மலையப்பசாமிக்கு அங்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Leave a Reply