திருமலையில் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு தங்க தேரோட்டம் !!

golden-chariot4திருமலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தங்க ரதத்தில் உற்சவர் மலையப்பசுவாமி தேவியர் சமேததராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கோவிலின் முன் கூடியிருந்த பக்தர்கள் புத்தாண்டு தினத்தன்று தங்கரதத்தில் பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடைந்தனர்.

திருப்பதி திருமலையில் புத்தாண்டு  மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா களைகட்டியது பக்தர்கள் பல இடங்களிலும் இருந்து வந்து குவிந்துள்ளனர். பதினாறு வருடத்திற்கு பிறகு திருமலையில் வைகுண்டஏகாதசியும் புத்தாண்டும் சேர்ந்து வருவதால் வழக்கமாக வரக்கூடிய கூட்டத்தை விட பக்தர்கள் கூட்டம் இரு மடங்கு அலைமோதியது. இதை எதிர்பார்த்து தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

Tirumala_day8_11

புத்தாண்டு நாளான காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தர்ம தரிசன வரிசையில் நிற்பவர்கள் மூலவரான சீனிவாசப்பெருமாளை தரிசிக்க பத்து மணி நேரம் முதல் பனிரெண்டு மணி நேரம் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்ப்படுகிறது.வருடத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் வரும் துவாதேசி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே கோவிலுனுள் உள்ளே உள்ள வைகுண்டவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.விழாவினை முன்னிட்டு கோவில் கோபுரங்கள் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது..

திருமலையை பொறுத்தவரை வைகுண்ட ஏகாதேசி மற்றும் துவாதேசி ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்டவாசல் கதவு திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் காரணமாகவும் புத்தாண்டு தினத்தன்று சீனிவாசப்பெருமாளை தரிசனம் செய்யவேண்டியும் ஏாரளமான பக்தர்கள் வருகைதந்தனர்.

வைகுண்ட ஏகாதேசியன்று அனைத்து வகை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு சர்வ தரிசனம் எனப்படும் தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.பக்தர்கள் தங்குவதற்கு 11 வகை தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் கூடுதலாக ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு காபி,டீ,பால் மற்றும் பொங்கல் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டது.

Leave a Reply