திருமாலுக்கு சக்கரம் அருளிய சிவபெருமான்

f4cbcebabe686538dc7f265938a23002

சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரன் , நான்முகனை அடுத்து அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.

அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறை கைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத் துவக்கலாம், என்றான்.

முதியவர் வேடத்தில் இருந்த சிவன் தன் இடது கால் பெரு விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் பூமி சுழலும் வேகமான 1670 கிமீ/மணி வேகத்தில் வேகமாக சுழல ஆரம்பித்து, அந்த வேகத்தில் அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

mappillaiswami

இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. கமலகண்ணனான திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார். அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் அருளினார் .

ஆனால் , அதை பெற்றுக்கொண்ட திருமாலுக்கோ , அதை தரிக்கும் சக்தி இல்லாமல் மயங்கி விட்டார். உடனே சிவ பெருமானை நோக்கி இறைஞ்சினார். பெருங்கருணை கடலான நம் சிவபெருமான் , அளவில்லாத தனது சக்தியிலிருந்து ஒரு துளியினை திருமாலுக்கு அளித்தார் . அந்த சிறு துளி சக்தி பெற்றதும், அன்று முதல் திருமால் ” சங்கர நாராயணர் ” என்ற பெயரை தாங்கி தன் கைகளில் ஏற்கனவே பாற்கடலை கடைந்தபோது கிடைத்த சங்கோடு , சக்கரத்தையும் தரித்துகொண்டார்.

நற்றுணையாவது நமச்சிவாயவே…..

Leave a Reply