ஆர்.கே.நகரில் போட்டியில்லை. கருணாநிதியை அடுத்து திருமாவளவனும் பின்வாங்கினார்.

thirumavalavanசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பதவியை ஏற்றுள்ள நிலையில் அவர் வரும் ஜுன்27ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது என திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் ” “ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் எடுத்த நிலைப்பாட்டினை, ஆர்.கே.நகர் இடைதேர்தலிலும் எடுத்துள்ளோம். இந்த இடைதேர்தலில் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் எந்த பயனும் ஏற்படாது. இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது” என்று கூறியுள்ளார்.

திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தங்கள் நிலையை தெளிவாக விளக்கிய நிலையில் மீதமுள்ள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply