பாஜக பக்கம் சாய்கிறதா விடுதலை சிறுத்தை கட்சி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

பாஜக பக்கம் சாய்கிறதா விடுதலை சிறுத்தை கட்சி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

thirumavalavanமக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி விரைவில் அந்த கூட்டணியில் இருந்து விலகி திமுக, அல்லது அதிமுக பக்கம் சாயும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத பாஜக பக்கம் தன் பார்வையை வி.சி.கட்சி திருப்பியுள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன. ஆனால் இதற்கு கட்சிக்குள்ளே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தலித்துகளைத் தாக்காதீர்கள். என் மீது தாக்குதல் நடத்துங்கள்’ என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார் பிரதமர் மோடி. இந்தக் கருத்துக்கு வி.சி.கவின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆதரவு தெரிவித்துப் பேசியிருந்தார்.

ஆனால் ரவிகுமார் கருத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘ மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் நாம் இருக்கும்போது, பொதுச் செயலாளரின் கருத்துக்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன’ என தொல்.திருமாவளவனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பாஜக கூட்டணியில் சேர்வதற்கு திருமாவளவன், ரவிகுமார் மூலம் வெள்ளோட்டம் பார்க்கின்றாரா என்றுகூட அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வி.சி.கட்சி பாஜகவில் இணைகிறதோ இல்லையோ கண்டிப்பாக மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

Leave a Reply