மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு தமிழக எம்பிக்கள்

மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு தமிழக எம்பிக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக எம்பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எம்பிக்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சரவை நேற்று அறிவித்துள்ளது

இதற்கு தமிழகத்தில் உள்ள விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: எம்பிக்களின் சம்பளத்தை பிடித்தம் செய்தது ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணானது என்றும் இந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்கு ஆனது என்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி நலனுக்காக செலவிடுவது தான் சரியாக இருக்கும் என்றும் இந்த தருணத்தில் அந்த தொகையை நிறுத்துவது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது மட்டுமல்ல மக்களை வஞ்சிப்பது ஆகும் என்று கூறினார்

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் அவர்கள் கூறும் போது, ‘கொரோனாவிற்கு நிதி வேண்டுமென்றால் கார்ப்பரேட் வரியை ஒரு சதவீதம் உயர்த்தினால் 5000 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் அதற்காக எம்பிக்கள் சம்பளத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கைவப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply