தொல்.திருமாவளவன் தலைக்கு ரூ.7 லட்சமா? பெரும் பரபரப்பு

தொல்.திருமாவளவன் தலைக்கு ரூ.7 லட்சமா? பெரும் பரபரப்பு
thirumavalavan
விடுதலைச்சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தலைக்கு கடந்த வருடத்திற்கு முன்னர் ரூ.5 கோடி என அறிவித்திருந்த நிலையில் தற்போது அவருடைய தலைக்கு ரூ.7 லட்சம் என பேரம் பேசி வாட்ஸ்அப்பில் செய்தி உலா வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  திருச்சி கண்டோன்மெண்ட் அருகே உள்ள கற்பக ரட்சகி  மகாலில் நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

”சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகள் அதிகமாக டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து இந்த சமூகத்தை குடிகாரர்களாக்கி விட்டார்கள். இதை தடுக்க வேண்டும்.

திருமாவளனை கொல்ல வேண்டும், தலையை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் 7 லட்சம் என ஒரு கும்பல் வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்புகிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் என் தலைக்கு 5 கோடி என அறிவித்தாரகள். அதற்கெல்லாம் நான் பயந்துவிடவில்லை. அரசியல் வாழ்க்கையில் சமரசம் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையாக  ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காக உழைக்கிறேன். ஒரு இடத்திலும் கூட அநாகரிகமாகவோ, வார்த்தை தடித்தோ பேசியதில்லை. சில பொது மேடைகளில் தலையை எடுப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என பேசியிருக்கிறார்கள். அப்படி நான் பேசியதாக ஏதாவது பதிவுகள் உண்டா?

பொறியாளர் கோகுல்ராஜை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த யுவராஜ் வீரன் என்கிறார். தமிழ்நாட்டில் ஓடி ஒழிந்தவன், தலைமறைவாக கரும்புக்காட்டில் பதுங்கியிருந்தவன், அடுத்த கட்சியின் கொடியறுக்கவே தலைமறைவாக இருத்தவன் எல்லாம் இப்போது வீரன், மாவீரன் என தனது பேருக்கு பின்னால் போட்டுக்கொண்டு திரிகிறார்கள். அப்படி மாவீரன் என போட்டுக்கொள்பவர்களை கண்டு பயப்படவேண்டியதில்லை.

கடந்த  செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் பிரசாரங்கள் நடத்தினோம். அதன் ஒருபகுதியாக  இந்த மகளிர் மதுஒழிப்பு மாநாடு. இதை நடத்தும் நமது கட்சியினர் முதலில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் தமிழக அரசு வரும் டிசம்பருக்குள் அரசு மதுபான கடைகளை மூட வேண்டும். இல்லையென்றால் தேர்தல் அரசியலை பற்றி கவலைப்படாமல், மக்களுக்காக மதுக்கடைகளை மூடும் போருக்கும் தயாராக இருக்கிறோம். மக்கள் கூட்டியக்கத்தை உருவாக்கியுள்ளோம். இதை எல்லோரும் பலவிதமாக பேசுகிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். நிச்சயம் மக்கள் கூட்டியக்கம் தமிழகத்தில் மாற்றத்திற்கான அரசியல் பாதையை உருவாக்கும்” என்றார்.

Leave a Reply