திருநள்ளார் கோவிலில் சனிஸ்வர வர்க்கர நிவேர்த்தி பூஜை!

thirunallaar sani bhagavan, jayamahal malar angi

திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் நேற்று சனிஸ்வர வர்க்கர நிவேர்த்தியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று சனிஸ்வர வர்க்கர நிவேர்த்தியை முன்னிட்டு மதியம் 1.08 மணிக்கு  துலாம் ரசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு பிரவேசிக்கிறார்.

TN_20140820123204244093

 

இதனால் திருநள்ளாரில் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடி சனிபகவானை வழிப்பட்டனர்.மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சனிபகவானை தரிசிக்க 50 ரூபாய் கட்டணம் தரிசனம், தர்ம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், தர்ம தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களின் வரிசை கோவில் ராஜகோபுர வீதி வரை பக்தகர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை தம்பிரான் சுவாமி,எஸ்.பி.,பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மேலும் பக்தர்கள் பாதுக்காப்புக்காக பல்வேறு இடங்களில் போலீஸ்சார் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Leave a Reply