ஜெயலலிதா படத்திறப்புவிழா! முரண்பாட்டின் உச்சத்தில் காங்கிரஸ்

ஜெயலலிதா படத்திறப்புவிழா! முரண்பாட்டின் உச்சத்தில் காங்கிரஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் இன்று சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது. இந்த பட திறப்புவிழாவுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த விழாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவும் இல்லை

இந்த நிலையில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்திறப்பு விழா முயற்சியை அரசு கைவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ‘பேரவையில் முதன் முறையாக ஒரு பெண் படத்தை திறப்பதை வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கூறியுள்ளார். ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இருவேறு கருத்துக்களை கூறி முரண்பாட்டின் உச்சத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply