திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருடசேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மலையப்பசாமியை வரவேற்றனர்.
அப்போது மலையப்ப சாமியை முற்றிலும் மறைக்கும் வகையில் அபூர்வ ஒளி தெரிந்தது. வீதி உலா புறப்படுவதற்கு முன்பு அர்ச்சகர்கள் கேமராவில் எடுத்த படத்தில் இந்த அபூர்வ ஒளி காணப்பட்டது.
இதைப்பார்த்த அர்ச்சகர்கள், பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதுபற்றி ஆலய தலைமை அர்ச்கர் ரமணி தீட்சிதர் கூறியதாவது:–
சுவாமி உற்சவம் மீது திருநாமம் வடிவில் ஒளி விழுந்துள்ளது. சுவாமி முகத்தில் இருந்து கருட முகம் வரையில் இந்த ஒளி காணப்பட்டது. தேவதைகள் ஏழுமலையானை வணங்கும் போது இதுபோன்றுதான் ஒளி தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருடசேவை அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மாலை மூலவருக்கு அணிவிக்கப்பட்டது.
அப்போது பச்சைக்கிளி ஒன்று பறந்து வந்து சுவாமியின் மீது அமர்ந்தது. ஆண்டாளே நேரில் வந்து ஏழுமலையானை தரிசனம் போல இருந்ததாக கோவில் அர்ச்சகர்கள் கூறினார்கள்.
அந்த பரபரப்பு அடங்கும் முன் உற்சவர் மீது அபூர்வ ஒளி விழுந்தது பக்தர்களை மேலும் பரவசப்படுத்தியது.