திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
கோவையை சேர்ந்த பாலமுருகன் – அபர்ணா தம்பதிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். மதியம் நைவேத்ய இடைவேளையில் சாமியை தரிசனம் செய்தனர்.
அப்போது சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வைரகிரீடத்தை காணிக்கையாக வழங்கினர். இந்த கிரீடத்தை தேவஸ்தான கிளை அதிகாரி சின்னங்காரி ரமணா பெற்றுக் கொண்டார். இந்த கிரீடம் முக்கிய திருநாளில் உற்சவருக்கு அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து பாலமுருகன் கூறியதாவது:–
இந்த வைர கிரீடம் செய்ய 1 மாதம் ஆனது. கடந்த முறை நான் கோவிலுக்கு வந்த போது மலையப்பசாமிக்கு கிரீடம் செய்து தரும்படி கேட்டனர்.
சுவாமிகள் அருளால் எனது வியாபாரத்தில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக சாமிக்கு நன்றியை செலுத்தும் வகையில் கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.