திருப்பதி திருமலையில் ஒரே நாளில் லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Tirumalatemple

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்கும் விதத்தில், தேவஸ்தானம் பல புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதை ஒட்டி, தற்போது, தினமும், ஒரு லட்சம் பேர், ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

ஜனவரி மாதத்தில், குடியரசு தினம் மற்றும் ரத சப்தமி ஒரே நாளில் வந்ததால், அன்று, 94 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். பின், கோடை விடுமுறையின் போது, மே, 16, 17ம் தேதிகளில், 93 ஆயிரம் பக்தர்களும்; 24, 25ம் தேதிகளில், 96 ஆயிரம் பக்தர்களும் தரிசித்தனர்.

கடந்த சனி, ஞாயிறுகளில், 99 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். தினசரி, ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது

Leave a Reply