திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், மாதந்தோறும் நடைபெறும் கிருத்திகை விழாவில் பக்தர்கள் பலர் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து தங்களது நேர்த்தி கடனை தீர்ப்பர். மேலும், அதிகளவில் பக்தர்கள் வந்திருந்து மூலவரை தரிசிப்பர். கோவிலில் நடந்த கிருத்திகை விழாவில் தமிழகம், ஆந்திரம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து சரவண பொய்கையில், புனித நீராடி பக்தி பாடல்கள் பாடிய வண்ணம் மலைப்படிகள் வழியாக நடந்து சென்று, மூலவரை தரிசித்தனர்.