திருவண்ணாமலையில் கிரிவலம் கீழப்பாவூரில் தீர்த்தவலம்

large_160700745

திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் நரசிம்மர் கோயில்களில் கிரிவலம் நடப்பது தெரியும். ஆனால், தீர்த்தவலம் நடக்கும் கோயில் பற்றி தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் தீர்த்தவலம் வரலாம். இங்குள்ள “நரசிம்ம புஷ்கரணி தீர்த்தம்’ மிகவும் விசேஷமானது. மேற்கு பார்த்த நரசிம்மரின் முன்பு இந்த தீர்த்தம் அமைந்துள்ளது வேறு எங்கும் காண முடியாதது. இக்கோயிலில் நரசிம்மர் 16 கைகளுடன் காட்சியளிக்கிறார். இங்கு மே 2ல் நரசிம்ம ஜெயந்தி மகோத்ஸவம் நடக்கிறது. இந்த நாளில் தீர்த்தத்தை வலம் வந்தால் மனதில் எண்ணியது நடக்கும் என்பது ஐதீகம். கிரிவலம் வருவதற்கு பவுர்ணமி உகந்த நாள் போல், தீர்த்தவலம் வருவதற்கு பிரதோஷம் மற்றும் சுவாதி, திருவோணம் நட்சத்திரங்கள், வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் உகந்தவை.
மே2 காலை 6.00 முதல் 12.00 மணி வரை பகவத் பிரார்த்தனை, புண்யாஹ வாசனம், மூல மந்திர ஜப ஹோமம், வேதபாராயணம் நடக்கும். பகல் 3.00 மணிக்கு 16 வகை மூலிகை மூல மந்திர ஹோமம், 12 வகை திரவிய அபிஷேகம் நடத்தப்படும். மாலை 5.30 மணிக்கு சுவாமி பவனி, மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. மே 4ல் சுவாதி நட்சத்திர பூஜை நடக்கிறது. அலைபேசி: 94423 30643.

Leave a Reply