விமான பணிப்பெண் வேலையை தொடர்வேன்: ஜனாதிபதி ராம்நாத் மகள் பேட்டி
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக நேற்று ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவியேற்று கொண்டார். எளிமையின் வடிவமாக இருக்கும் அவர் அப்துல்கலாம் வழியில் நடப்பேன் என்று நேற்றைய பதவியேற்பு விழாவின்போது பேசினார்.
இந்த நிலையில் எனது தந்தை நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் நான் தற்போது செய்து கொண்டிருக்கும் விமான பணிப்பெண் வேலையை தொடர்ந்து செய்வேன் என்று அவரது மகள் சுவாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய சுவாதி, ‘எனது தந்தை நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதவியேற்றதற்கு அவருடைய கடின உழைப்பும், விடா முயற்சியும் தான் காரணம்.
எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அனைவரிடம் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அதன் காரணமாகத்தான் எங்களது குடும்பம் இப்போது சொந்தக் காலில் நிற்கிறோம். அவர் உயர்ந்த பதவிக்கு வந்ததால் எனது வேலையை விடமாட்டேன். நான் தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணாகவே பணிபுரிய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.