4 உயிர்கள் போகக் காரணமாக இருந்தவர்களுக்குத் தக்க தண்டனை: அண்ணாமலை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

தமிழக பாஜக சார்பாகச் சிறு உதவிகளை அந்த குடும்பத்திற்கு வழங்கினோம்

உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு வேலை வழங்கவேண்டும் என்ற அவர்களின் நேர்மையான கோரிக்கையை நிறைவேற்றாமல் இந்த அறிவாலயம் அரசு உதாசினப்படுத்தி வருகிறது.

அனுமதி பெறாமல் எப்படி இந்த குவாரி இயங்கி வந்தது. அரசு அதிகாரிகளை தம் பணியைச் செய்யவிடாமல் அரசியல் இடையூறு ஏதேனும் இருந்ததா என்பதையும் தமிழக முதல்வர் விசாரிக்க வேண்டும்.

4 உயிர்கள் போகக் காரணமாக இருந்தவர்களுக்குத் தக்க தண்டனையை இந்த அரசு பெற்றுத் தரவேண்டும்