கர்நாடக பக்தர்களுக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்த தமிழர்கள். இதை பார்த்தாவது திருந்துவார்களா?
ஃபேஸ்புக்கில் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் போட்டதற்காக 10 கன்னட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தமிழனை ரவுண்ட் கட்டி அடித்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக பக்தர்களுக்கு தமிழ் பக்தர்கள் பூரணகும்ப மரியாதை செலுத்தி நெகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக செய்தி வெளிவந்த நிலையில் இன்று இந்து மக்கள் கட்சியினர் கர்நாடகா பக்தர்களை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, கோவிலுக்கு அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்துவைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் பூர்ண கும்ப மரியாதையுடன் கர்நாடாக பக்தர்களை வரவேற்று பாதுகாப்புடன் அனுப்பி வைப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தமிழக பதிவு எண் வாகனங்களை பார்த்தாலே அடித்து உடைக்கப்படும் நிலையில், ஒற்றுமையை கற்பிக்கும் வகையில், கர்நாடக பக்தர்களுக்கு வரவேற்பும், பாதுகாப்பும் அளித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இதை பார்த்தாவது கன்னடர்கள் திருந்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.