அனிருத்தின் முதல் படம் இதுதானாம்.
இளம் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் ‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிக்கி சில நாட்கள் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் காவல்நிலையத்தில் ஆஜரான சிம்பு, பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியதை அடுத்து தற்போது அனிருத் நிம்மதி பெருமூச்சுடன் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கோலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு வரும் அனிருத்துக்கு தற்போது ‘ரம்’ என்ற திகில் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த திரைப்படம் ஒரு திகில் மற்றும் பேய்ப்படம் என்றும் ஆனால் தனக்கு சிறுவயதில் இருந்தே பேய் என்றால் மிகவும் பயம் என்றும் இதுவரை ஒரு பேய்ப்படம் கூட தான்பார்த்ததில்லை என்றும் முதல்முறையாக ஒரு பேய்ப்படத்தை பார்த்து பின்னணி இசை மற்றும் பாடல்கள் அமைகவுள்ளதாகவும்’ரம்’ படம் குறித்து அனிருத் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் ரிஷிகேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார். இவர் ஏற்கனவே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர் என்பதும் இவருக்கு ஜோடியாக ‘சூதுகவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Chennai Today News: This is the first horror film for Anirudh