டிரம்ப் குடும்பத்துடன் இந்தியா வரவேண்டும். பிரதமர் மோடி வேண்டுகோள்
பாரத பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு வெள்ளை மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு டிரம்ப் சிறப்பான விருந்தளித்து கெளரவித்தார். அதன்பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்றும் அமெரிக்க முதல் பெண் மெலினா டிரம்ப் ஆகியோருக்கு இந்தியா சார்பாக மகத்தான நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு அளித்த வரவேற்பு, 125 கோடி இந்தியர்களுக்கும் அளித்த வரவேற்பாக கருதுகின்றேன்.
இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் நட்புகளை ஊக்குவிக்க வேண்டும். இன்று இரு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முக்கியமாக பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் இணைந்து போராட வேண்டியது முக்கிய விஷயமாக உள்ளது.
வர்த்தகம், முதலீடு ஆகியவை மேம்படுத்துவதும், டெக்னாலஜி, புதுகண்டுபிடிப்புகள் சம்பந்தமான அறிவு பகிர்வு முக்கியம். வேலை வாய்ப்பை அதிகரிக்கும் முக்கிய விஷயத்தை அமெரிக்காவிடம் எதிபார்க்கின்றோம். கடல் வர்த்தக மேம்படுத்துவது மிக அவசியம். இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் குடும்பத்துடன் வருகை தரவேண்டும் என்பது எங்கள் ஆசை என மோடி பேசினார்.