ஆறு மாதம் டேட்டிங். அப்புறம்தான் திருமணம். அமெரிக்க இளைஞரின் வித்தியாசமான விளம்பரம்.

ஆறு மாதம் டேட்டிங். அப்புறம்தான் திருமணம். அமெரிக்க இளைஞரின் வித்தியாசமான விளம்பரம்.

datingஅமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் தனக்கு மனைவியாக வருபவரை தேர்ந்தெடுக்க முதலில் தன்னுடன் ஆறு மாதங்கள் டேட்டிங் செய்யவேண்டும், அந்த ஆறு மாதத்தில் அவருக்கு அந்த பெண்ணை பிடித்தால் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். தன்னுடன் டேட்டிங் வரவிரும்பும் பெண்ணை தனக்கு அறிமுகப்படுத்துபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசும், திருமணத்திற்கு தேர்வாகும் பெண்ணை அறிமுகப்படுத்துவோருக்கு சிறப்பு பரிசும் வழங்கவுள்ளதாக அவர் அந்த விளம்பரத்தில் அறிவித்துள்ளார்.

29 வயது ரேன் லூ யூ என்ற தொழிலதிபர் கொடுத்துள்ள இந்த விளம்பரத்திற்கு தினமும் ஏராளமானோர் பதிலளித்து வருவதாகவும், பல பெண்கள் இவருடன் டேட்டிங் செல்ல முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தன்னுடைய விளம்பரம் குறித்து ரேன் லூ யூ கூறியதாவது, “மதிப்பில்லாத எவ்வளவோ விஷயங்களுக்கு, நாம் மிக அதிகமாவே செலவு செய்கிறோம். எனவே, வாழ்நாள் முழுவதும் நம்முடன் வாழப்போகும் பெண்ணுக்காக செலவு செய்வதில் ஒன்றும் தவறில்லை’ என கூறியுள்ளார். இந்த விளம்பரம் DateRen.com என்ற இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இந்த இணையதளம் இவருடைய சொந்த இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply