வீடுகட்ட கொத்தனார் தேவையில்லை. வந்துவிட்டது புதிய ரோபோ

brickerஇனிவரும் காலங்களில் வீடுகள் கட்டுவதற்கு எஞ்சினியர்களோ, கொத்தனார், சித்தாள்களோ தேவைப்படாது. வீடுகளை வழகாக வடிவமைத்து கட்டுவதற்காக புதிய ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரோபோ ஒரு வீட்டை இரண்டே நாட்களில் கட்டி முடித்துவிடும் திறமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்க் பிவாக் என்ற சிவில் என்ஜினீயர் கடந்த பல ஆண்டுகளாக வீடுகட்டும் ரோபோ குறித்து ஆராய்ச்சி செய்து தற்போது ஒரு புதிய ரோபோவை அவர் வடிவமைத்துள்ளார். இதற்கு ஹட்ரியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

4 முதல் 6 வாரங்களில் மனிதர்கள் கட்டும் வீட்டை இந்த ரோபோ இரண்டே நாட்களில் கட்டி முடித்து விடும் என்பதுதான் இந்த ரோபோவின் சிறப்பு

ஒரு மணி நேரத்தில் 1000 செங்கற்களை அடுக்கி வீடு கட்டும் பணி மேற்கொள்ளும் இந்த ரோபோவிற்கு 28 அடி நீள கைகள் உள்ளன. அதை வைத்து அதிவேகமாக வீடு கட்டும் பணியை இது மேற்கொள்கிறது.

ஆண்டுக்கு சுமார் 150 வீடுகளை கட்டும் திறன் படைத்த இந்த ரோபோவை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக இதனை கண்டுபிடித்த என்ஜினீயர் மார்க் பிவாக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply