ரஜினியின் ‘2.0’ படத்தின் டப்பிங் முடிந்தது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் படபிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட அனைத்து நடிகர், நடிகைகளின் டப்பிங் பணியும் முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது., ஆனாலும் தொடர்ந்து VFX மற்றும் மற்ற போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் இன்னும் சில மாதங்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் முதல்முறையாக 2D, 3D டெக்னாலஜி மட்டுமின்றி ஐமேக்ஸ் டெக்னாலஜியிலும் உருவாகி வருவதாகவும், இதனால் இந்த படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஐமேக்ஸ் வசதிக்காக சென்னை காசி திரையரங்கம் உள்பட ஒருசில திரையரங்குகள் ஐமேக்ஸ் டெக்னாலஜிக்கு மாற்றாப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.