ரூ.2000 நோட்டில் ஆடையா? பிரபல நடிகைக்க்கு குவியும் கண்டனங்கள்
பிரபல நடிகை க்ரிட்டி சனோன் ரூ.2000 நோட்டுக்களால் ஆன உடையணிந்த புகைப்படம் ஒன்று டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வைரலாக பரவி வருகிறது.
நாட்டில் பணப்பற்றாக்குறை காரணமாக ஓரிரண்டு 2000 ரூபாய் நோட்டை பார்க்கவே முடியாத நிலையில் இந்த நோட்டுக்களால் உடையணிந்து போஸ் கொடுத்த நடிகையை பலர் சமூக வலைத்தளங்களில் திட்டி வருகின்றனர்.
ஆனால் நடிகை க்ரிட்டி சனோன் இதை மறுத்துள்ளார். இப்படிப்பட்ட உடையை தான் அணியவே இல்லை என்றும் போட்டோஷாப் வல்லுனர் ஒருவர்தான் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டு இவ்வாறு விஷமம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.