தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும், மறு மதிப்பீட்டுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மே 2015 தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற கடந்த பிப்ரவரி 16 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் கடந்த 12ம் தேதி முதல் இன்று (மார்ச் 16) வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மறு கூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.205, மறு மதிப்பீட்டுக்கு ரூ.505 செலுத்தி அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நாளை 17ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூறியுள்ளார்.