புனித பொருளுக்காக நிர்வாண நிலையில் நின்ற ஜப்பான் இளைஞர்கள்
ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள சாய்டாஜி கனான் என்ற கோவிலில் திருவிழா ஒன்று விசேஷமாக நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக அங்குள்ள மதத்தலைவர் ஒருவர் புனித பொருளை தூக்கி எறிவார்.
இந்த பொருளை கைப்பற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கோவிலின் முன் கூடி நிற்பார்கள். இந்த பொருளை கைப்பற்ற வேண்டுமானால் நிர்வாண நிலையில் காத்திருக்க வேண்டும் என்பது விதி
இதன் காரணமாக நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நிர்வாண நிலையில் கோவிலின் முன் காத்திருந்து மதத்தலைவர் தூக்கி எறிந்த புனித பொருளை கைப்பற்றி சென்றனர். இந்த பொருள் அதிர்ஷ்டவசமாக கிடைத்தால் அந்த ஆண்டு முழுவதும் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை