பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் ச்க்கி 7 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிச்தான் முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் நவாஸ் ஷெரீப் அவர்களின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி வெற்றி பெற்று அவர் பிரதமராக கடந்த கடந்த 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் பதவியேற்றார்.
இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த இம்ரான்கான் கட்சி, தேர்தலில் தில்லுமுல்லு நடத்தியதாகவும், அதனால் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகவேண்டும் என்றும் கடந்த சில மாதங்களாக போர்க்கொடி உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் இம்ரான்கான் தன்னுடைய ஆதரவாளர்கள் சுமார் 30ஆயிரம் பேர்களுடன் நவாஸ் ஷெரிப் வீட்டில் உள்ள தடுப்பை மீறி உள்ளே நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். மேலும் ரப்பர் குண்டுகளை உபயோகித்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் பலியானதாகவும் 300 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நவாஸ் ஷெரீப் அரசுக்கு இன்று கடைசி நாள் என இம்ரான்கான் கெடு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரை எங்களது போராட்டத்தை நிறுத்த மாட்டோம். நவாஸ் ஷெரீப் தனது அரசை தக்க வைத்துக் கொள்வதற்காக போலீசை ஏவி விட்டுள்ளார். ஆயுதங்கள் இல்லாத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் மீடியாக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. நவாஸ் ஷெரீப் உடனடியாக பதவி விலக வேண்டும். இது அவருக்கு கடைசி நாள்” எனக் கூறியுள்ளார்.