பாலிவுட்டுக்கு போகிறது தோழா

பாலிவுட்டுக்கு போகிறது தோழா

thozaa1சமீபத்தில் வெளியான தோழா திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகி இதுவரை ரூ.85 கோடி இரண்டு மொழிகளிலும் சேர்த்து வசூல் செய்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.100 கோடி வசூலை தொடுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி, தமன்னா, நாகார்ஜூனா ஆகிய மூவருக்குமே இந்த படம் ஒரு வெற்றிபடமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாகவும் இந்த படத்தில் கார்த்தி வேடத்தில் வருண் தவாண் மற்றும் நாகார்ஜூனா வேடத்தில் அமிதாப்பச்சன், தமன்னா வேடத்தில் கரீனாகபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் கரண்ஜோஹர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply