ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். மிரட்டல் கடிதத்தால் பதட்டம்.

Jaya_CM1-660x330

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரக்கோணம்காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இரண்டு அலுவலகங்களுக்கும் இன்று ஒரு மர்ம கடிதம் வந்தது.

அந்த கடிதத்தில் எதிர்வரும் 8-ந் தேதி ராணிப்பேட்டை வரும் முதல்வர் ஜெயலலிதாவை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொலை செய்யப் போவதாக எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கங்காதரன், வெங்கட்ராமன், சீதாபதி மற்றும் சீதாராமன் என பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதம் காரணமாக காவல்துறை பதட்டம் அடைந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வேலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து கடிதம் எழுதிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் வேலூர் வரும் முதல்வருக்கு கூடுதல்  பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது

Leave a Reply