ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுக்கு விற்றுவிடுவார் அரவிந்த் கெஜ்ரிவால். மோடி

modi copy

 

இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மூன்று AKக்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அந்த மூன்று AKக்களையும் கட்டுப்படுத்த பாரதிய ஜனதாவிற்கு வாக்களியுங்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட நரேந்திர மோடி பேசியபோது, “இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு 3 AKக்கள் ஆதரவாக உள்ளன. ஒன்று ஏ.கே. 47 துப்பாக்கி, இரண்டாவது இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மூன்றாவது, அரவிந்த் கெஜ்ரிவால் என்ற ஏ.கே.

இந்த மூன்றாவது ஏகே 49 நாளில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே, இவர் ஏ.கே.49.

மேலும், ஆம் ஆத்மி கட்சி தங்கள் இணைய தளத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஜம்மு காஷ்மீரை மாநிலத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்ட ஏ.கே. ஆட்சிக்கு வந்தால் நிஜமாகவே இந்த மாநிலத்தை பாகிஸ்தானுக்கு விற்றுவிடுவார். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பாகிஸ்தான் ஏஜண்ட்.

இவ்வாறு மொடி பேசினார்.

Leave a Reply