மெரினா இளைஞர்களின் 3 கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஏற்பாரா?
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் ஆரம்பித்த போராட்டத்தீ நேரம் ஆக ஆக எரிமலையாக மாறி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சியை இதற்கு முன்னால் இதுபோல் பார்த்ததில்லை. மாணவர்கள் என்றால் பேருந்தில் கேலி செய்பவர்கள் என்று இதுவரை நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த ஆக்கபூர்வமான போராட்டம் ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் போராட்டம் செய்து வரும் மெரினா இளைஞர்கள் 3 கோரிக்கைகளை வைத்துள்ளதாக தந்திடிவி வாயிலாக தெரிய வந்துள்ளது.
அந்த மூன்று கோரிக்கைகள் இதுதான்:
1. காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும்
2. தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து அவசர சட்டம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும்
3. தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
இந்த மூன்று கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்று, மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்