புதுடெல்லியில் உள்ள சர்தார் பஜார் பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே இன்னும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
டெல்லி சர்தார் பஜாரில் 4 மாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் காங்கிரீட் போடும் பணி நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரீட் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததால் கட்டிடப்பணியில் இருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்கள் பஸ்வான் வயது 25, கன்வார் பால் வயது 50 மற்றும் அசோக் வயது 25 ஆகியவர்கள் ஆவார்கள். மேலும் காயமடைந்த 12 பேர்களும் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்த வடக்கு டெல்லி முனிசிபல் கார்பரேஷன் கமிஷனர் பிரவீன் குப்தா, இந்த கட்டிடம் கட்டிட பணியின் பொறியாளர்கள் பகர்கானி, மற்றும் உதவிபொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர்கள் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1m4Bbe6″ standard=”http://www.youtube.com/v/-76tUyGoPOs?fs=1″ vars=”ytid=-76tUyGoPOs&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3691″ /]