இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் விடுதலைப்புலிகள் என்று கூறப்படும் 3 பேர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. இதனால் தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் என சந்தேகிக்கக்கூடிய வகையில் சுற்றித்திரிந்த கஜீபன் பொன்னையா செல்வநாயகம், சுந்தரலிங்கம் கஜீபன் மற்றும் அப்பன் ஆகிய மூன்று பேர்களை சுட்டுக்கொன்றுவிட்டதாக இலங்கைஅ ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று அறிவித்துள்ளார்.
இவர்கள் மூன்று பேர்களுக்கும் தங்குவதற்காக வீடு கொடுத்த ஜெயக்குமாரி என்ற பெண்ணும் அவரது 14 வயது மகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.