அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் ஜனவரி 29ஆம் தேதி சோலோவாக ரிலீஸ் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அஜீத்துடன் போட்டி போட சிறு படங்கள் விரும்பாத நிலையில் அவற்றின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அஜீத் படத்துடன் ஒருசில படங்களை மோத வைக்க திரைமறைவில் ஒருசிலர் காய் நகர்த்தி வருவதாக கோலிவுட்டில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டில் அஜீத்துக்கு எதிராக செயல்படும் ஒரு முக்கிய நபர், ஜனவரி 29ஆம் தேதியில் தனுஷின் அனேகன், கார்த்தியின் கொம்பன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய வைத்து அஜீத்துக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து எந்த கவலையும் இல்லாமல் அஜீத் வழக்கம்போல தனது அடுத்த பட இயக்குனரான சிறுத்தை சிவாவுடன் கதை விவாதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. என்னை அறிந்தால் பட தயாரிப்பாளரும் இதுகுறித்து எவ்வித டென்ஷனும் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை படங்கள் போட்டியிட்டாலும் அஜீத் படத்தின் 3 நாள் வசூலில் என்னுடைய அசல் வந்துவிடும் என்று தயாரிப்பாளர் தைரியமாக கூறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.