மும்பையில் கூரியரில் வந்த் செக்குகளை திருடி போலி வங்கிக்கணக்கில் பணமாக மாற்றி, அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் உள்ள மாட்டுங்கா மகேஷ்வரி பூங்கா அருகே உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியில் தனியார் கம்பென் ஒன்றின் பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து அதில் அடிக்கடி செக்குகளை போட்டு வந்த மூன்று இளைஞர்கள் மீது வங்கி மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மும்பை காவல்துறையினர்களிடம் புகார் செய்தார்.
மும்பை போலீஸார் அந்த நிறுவனம் இருப்பதாக வங்கியில் கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அப்படி ஒரு கம்பெனியே இல்லை என்பது தெரிந்தது. இதன் பின்னர் வங்கிக்கணக்கு ஆரம்பித்த மூன்று இளைஞர்களையும் பிடித்து விசாரணை செய்தபோது, தங்கள் நண்பர் ஒருவர் கூரியரில் வேலை செயதாகவும், அவர் கூரியரில் வரும் செக்குகளை திருடி தங்களிடம் கொடுப்பதாகவும், அந்த செக்குகளை பல்வேறு வங்கிகளில் வங்கிக்கணக்குகளை ஆரம்பித்து பணமாக மாற்றி உல்லாசமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
அதன்பின்னர் சுனில் குவார், ரகுத்தம் ராமன்னா, லட்சுமண் மாருதி) ஆகிய மூவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு உதவிய கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பரும் கைது செய்யப்பட்டார்.