டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த மூவரும் பலி. மத்திய அரசு அறிவிப்பு
கடந்த மாதம் 8ஆம் தேதி மூன்று விமானிகளுடன் காணாமல் போன டோர்னியர் விமானத்தின் முக்கிய பாகங்கள் அனைத்தும் கிடைத்துவிட்ட நிலையில், அதில் பயணம் செய்த மூவரும் இறந்துவிட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் பாகங்களுடன் கிடைத்த மனித எலும்புக்கூடுகள் சென்னையில் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று டெல்லியில் செய்திகளிடம் பேசிய அமைச்சர் மனோகர் பரிக்கர், “விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் 3 இடங்களில் மனித எலும்புகள் எடுக்கப்பட்டதாகவும், அந்த மனித எலும்புகள் சென்னையில் உள்ள விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகள் திரும்பி வருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்த அவர்களது குடும்பத்தினர்களுக்கு இந்த தகவல் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.