திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு
திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் மூன்று மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி பிப்.18ஆம் தேதி திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும் பிப்.27ஆம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய இரண்டு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் மூன்று மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 3ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது