டெல்லியில் இன்று காலை மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள இந்தர்லாக் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று இன்று திடீரென இட்ந்து விழுந்ததால், இடிபாடுகளுக்கிடையே சிக்கிய ஆறு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மீட்புக்குழுவினர் இன்னும் வேறு யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. ஆனாலும் இடிபாடுகள் அகற்றப்பட்டால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என மீட்புக்குழுவினர் கூறுகின்றனர். சம்பவ இடத்திற்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டு, வருகின்றனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1vg1rXW” standard=”http://www.youtube.com/v/vrUv7wV39ys?fs=1″ vars=”ytid=vrUv7wV39ys&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9118″ /]