ராஜ்யசபாவில் சச்சின் கேட்ட முதல் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு.

ராஜ்யசபாவில் சச்சின் கேட்ட முதல் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு.
sachin
பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக இருந்தாலும் ராஜ்ய சபா எம்.பி. பதவியை ஏற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை ஒரு கேள்வியை கூட எழுப்பாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முதன்முதலாக அவர் ஒரு கேள்வியை எழுப்பினார். ஆனால் அவருடையை கோரிக்கை மத்திய அமைச்சகத்தால் மறுக்கப்பட்டுவிட்டது.

கடந்த 2012 ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி சச்சின் ராஜ்யசபா எம்.பி.யாக, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசினால் நியமனம் செய்யப்பட்டார். கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரரான சச்சின், ராஜ்யசபாவில் எப்படி செயல்பாடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகம் இருந்தது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சச்சினின் செயல்பாடு மீது கடும் விமர்சனங்கள்தான்  எழுந்தன. எம்.பி பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் நேற்று தனது முதல் கேள்வியை சச்சின் டெண்டுல்கர் கேட்டுள்ளார் .

சென்னை, மும்பை, டெல்லி ஆகிய மூன்று நகரங்களில் செயல்படும் புறநகர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக அவை தனிக்கோட்டமாக அறிவிக்கப்படுமா? என்று ரயில்வே அமைச்சரிடம் அவர் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு பின்னர் அவர் கேட்ட முதல் கோரிக்கை மத்திய அரசினால் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Three years on, Sachin Tendulkar asks first question in Parliament

Leave a Reply