ராமனுக்கு பட்டம் சூட்டும் முடிவுக்கு வந்தார் தசரதர். பட்டாபிஷேக நாளில் ராமன் சபா மண்டபம் செல்லத்தயாரானார். அப்போது கைகேயியிடம் இருந்து அழைப்பு வர, அவளைச் சந்திக்கச் சென்றார். பரதன் நாடாளவும், நீ 14 ஆண்டு கானகம் செல்லவும் உன் தந்தை கட்டளையிட்டிருக்கிறார், என்றாள் அவள்.இதைக் கேட்டும் ராமனின் முகம் சிறிதும் வாடவில்லை. சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் போல அழகுடன் காட்சியளித்ததாக ராமாயணத்தில் கம்பர் குறிப்பிடுகிறார். மகிழ்ச்சி, துக்கம் இரண்டையும் சமமாகக் கருத வேண்டும் என்று பகவத்கீதையில் உபதேசித்த கண்ணன், ராமனாக அவதரித்த போதே அதை வாழ்ந்தும் காட்டி விட்டான்.