கனிமொழிக்கு திடீர் அறுவை சிகிச்சை. கருணாநிதி, ஸ்டாலின் நலம் விசாரித்தனர்.

kanimozhiதிமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுகவின் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழிக்கு திடீரென தைராய்டு பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கன்மொழிக்கு நேற்று திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தைராய்டு பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு,  அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டதாகவும், தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கனிமொழியைப் பார்த்து நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ”கனிமொழியின் கழுத்தில் பிடரிக்குப் பக்கத்தில் தைராய்ட் கிளாண்ட்ஸ் ஒன்றை அகற்றுவதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, அந்தக் கட்டியை அகற்றிவிட்டனர். கனிமொழி உடல் நலம் பெற்று மருத்துவமனையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply