சீன மொழியை கற்று கொண்டே ஆக வேண்டும்: திபெத்தியன்களுக்கு சீனா உத்தரவு
சீன மொழியை கட்டாயம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என திபெத் மக்களுக்கு சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திபெத் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சீன மொழியை கற்பிக்கும் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் திபெத் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் சீன மொழியையும் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சீன அதிகாரிகளால் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டு வருவதால் திபெத் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது