ஜேஎன்யு மாணவர் கன்னையா சிறையில் தற்கொலை முயற்சியா?
ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் கன்னையா ஜேஎன்யூ விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாள் நீதிமன்ற காவலில் இருக்கின்றார். அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் கருதுவதால் அவர் சிறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக திகார் சிறையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கன்னையவுக்கு திகார் சிறையில் அறை அண் 3 வழங்கபட்டுள்ளது. இதே அறையில்தான் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சல் குரு அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கன்னையாவவ 24மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பல அடுக்குப் பாதுகாப்பின் கீழ் அவர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தில்லி சிறைத் துறை அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் மட்டுமே அவரது சிறை அறைக்கு அருகே செல்ல முடியும் என்றும் அவர் சாப்பிடும் உணவு கூட பரிசோதிக்கப்படுவதாகவும் சிறைத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.