படுக்கையை பகிர்ந்தும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை: டிக்டாக் இலக்கியா பேட்டி
பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு அந்த இயக்குனர்கள் தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக் புகழ் இலக்கியா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சினிமா ஆசையால் தான் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தன்னை பயன்படுத்திய இயக்குனர்கள் அதன் பின்னர் தன்னை பட வாய்ப்புக்கு அழைக்கவில்லை என்று தானே முன்வந்து போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது தவறு என்று தெரிந்தும் படுக்கையை பகிர்ந்து கொண்டு அதன் பிறகு ஏமாற்றிவிட்டார் என்று கூறுவது ஏமாளித்தனம் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் துணிவுள்ள உங்களுக்கு ஏமாற்றத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது