மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் இன்றுக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி மாலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்வதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றுக்குள் சேர வேண்டுமென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும் பிப்ரவரி 21ம் தேதிக்குள் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்