ரிபப்ளிக் டிவி அர்னாப் மீது டைம்ஸ் நெள டிவி கிரிமினல் புகார்
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் டைம்ஸ் நெள டிவி நிறுவனம், அர்னாப் மீது கிரிமினல் புகார் ஒன்’றை அளித்துள்ளது
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா தனது வீட்டு வேலைக்காரருடன் பேசிய டேப் ஒன்றை ரிபப்ளிக் டிவி ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த டேப் அர்னாப் தங்கள் தொலைக்காட்சியில் பணிபுரியும்போது பதிவு செய்யப்பட்டது என்றும், இந்த டேப் தங்களுடைய நிறுவனத்தின் அனுமதியின்றி அர்னாப் தன்னுடைய டிவியில் ஒளிபரப்பியது காப்பிரைட் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என்றும் புகார் மனு ஒன்றை டைம்ஸ் நெள டிவி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
னவே காப்பிரைட் சட்டத்தின் கீழ் ஐ.பி.சி 403 மற்றும் மேலும் சில பிரிவுகளின் கீழ் அர்னாப் மற்றும் ரிபப்ளிக் டிவி நிருபர் ஸ்ரீதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்